articles

img

தொலைத்தொடர்புச் சட்டம் 2023 மோடி அரசின் டிஜிட்டல் சர்வாதிகாரம்-அபர் குப்தா

தொலைத்தொடர்பு மசோதா, 2023., ஒரு காலனித்துவ கட்டமைப்பை விரிவுபடுத்தி டிஜிட்டல் சர்வாதிகா ரத்திற்கு விட்டுச் செல்லும். மேலும், இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்றவும் வழி வகுக்கும்.

டிசம்பர் 21, 2023 வியாழன், இரவு 7. 58 மணிக்கு தொலைத் தொடர்பு மசோதா 2023 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதை குறிக்கும் வகையில் மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் “பாரத் முன்னேறுகிறது” என ட்விட்டரில் பதிவிட்டார். இந்திய தந்தி சட்டமும் அத்து டன் ரத்து செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் மேற்பார்வையில் இந்தியா என்ற சொல் தவிர்க்கப்படுவதையும் பாரத் என்ற சொல் வேண்டுமென்றே தனித்துவமாக பயன்படுத்தப்படு வதையும் கவனியுங்கள்.\

மோடி முத்திரை!
எல்லா சாதனைகளும் பிரதமரின் தனிப்பட்ட கணக்கில் வரவு வைக்கப்படுவது திட்டமிட்ட ஒரு நடவடிக்கை.ஒன்றிய அரசு நிறைவேற்றும் ஒவ்வொன்றிலுமே பிரதமர் மோடி எனும் முத்திரை பதிக்கப்படுகிறது. ஒரு தனி மனிதனின் கீழ் இந்தியா வின் கலாச்சார தாயகம் இப்படித்தான் உருவாக்கப் படும் என்பது வெளிப்படையான ஒரு விதியாகவும் மாறிவருகிறது. நளினமான கோப்பைகளில் தேநீர் அருந்தும் மேல் தட்டு மனிதர்களை காட்டிலும் தார்ப்பாய் போட்டு  மூடப்படும் அடித்தட்டு வெகு ஜனங்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கத்தை இறுதியில் நாம் பெற்று விட்டோம் என நாம் நம்பச் செய்வதற்கு இது தூண்டுகிறது.

டிஜிட்டல் சர்வாதிகார அரசாங்கத்திற்கான கால னித்துவ சட்டங்களை மேம்படுத்தும் கருவியாக  தொலைத்தொடர்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள் ளது. இந்த திசை திருப்பல்களும் பகட்டு சித்தரிப்பு களும் மக்களிடமிருந்து இந்த உண்மையை மறைக்கின்றன.

டிஜிட்டல் பயன்பாட்டிலும் ஏற்றத்தாழ்வுகள்!

தொலைத்தொடர்பு மசோதாவின் “பாரதிய” விதிகளில் இருந்து நம்முடைய விவாதத்தை துவங்க லாம். பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ளபடி அலைக்கற்றைகளை  “மனித ஆன்மாவுடன்” ஒப்பிடும் வரைவுகள் பொது ஆலோசனையின் போது வெளி யானது. சர்வதேச சேவைக்கான நிதி கட்டமைப்பு  (Universal Service Obligation Fund)என்ற பெயர்கூட “இந்திய” நாகரீகத்தின் படி டிஜிட்டல் பாரத் நிதி என மாற்றப்பட்டுள்ளது. கிராமப்புற சேவையை விரிவுபடுத்துவதற்கு பயன்படும் இந்த கட்டமைப்பு நிதி ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு சேவை வழங்குபவரிடம் இருந்து வசூல் செய்யப்பட வேண்டும்.

இதை உறுதிசெய்யும்  தொலைத் தொடர்பு சட்டம் 1885 இப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தும் மக்களி டம் ஏற்றத்தாழ்வு ஏற்கனவே அதிகமாகி வருகிறது. மேலும் அவர்களின் எண்ணிக்கையும் தேக்க நிலையை அடைந்துள்ளது என்பதை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

ஸ்மார்ட் போனின் விற்பனை இரண்டாவது ஆண்டாக தேக்கமடைந் துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய யோச னைகள் அல்லது தீர்வுகளை முன் வைப்பதில் இந்த  சட்டம் தோல்வி அடைந்துள்ளது. தேசியவாத  வெறியை  கிளப்பி விடுவதன் மூலம் இந்த தோல்வியை ஆட்சியாளர்கள் மறைக்க முயல்கின்றனர்.அரசாங்கத்தின் விருப்பத்தேர்வான தற்போதைய தனியார் நிறுவனங்களை தேசிய சாம்பி யன்களாகவும் அவர்கள் முன் நிறுத்துகின்றனர்.

முறையான ஏலமின்றி ஒதுக்கீடு செய்ய விதிகள்...

செயற்கைக்கோள் அலைக்கற்றைகளை முறை யான ஏலம் இன்றி ஒதுக்கீடு செய்வதற்கான விதிகள் தொலைத்தொடர்பு மசோதாவின் முதல் அட்டவணை யில் பட்டியலிடப்பட்டுள்ளன.  தனியார் நிறுவனங்கள் சந்தையில் நுழைவதை எளிதாக்கும் வகையில்  விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி மாநிலங்களவையில் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். இஸ்ரோ செயற்கைக்கோள் பேருந்து தொழில் நுட்பத்தை அதானி குழுமத்தின் ஆல்பா டிசைன் தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு மாற்றியிருக்கின்ற னர். ஆகஸ்ட் 5, 2023இல் வெளிவந்த அவருடைய கட்டுரை இந்த அதிர்ச்சிகரமான உண்மையை அம்ப லப்படுத்துகிறது.

இந்தியாவில் இனி மொபைல் செயற்கைக்கோள் சேவையில் யார் விரைவில் நுழைய முடியும் என்பதை யும் இது தெளிவாக்குகிறது .ஒழுங்குமுறை ஆணைய விதிகளும் ஆன்லைன் தகராறு குறித்த தீர்வுகளுக்கான ஏற்பாடுகளும் கூட  வாடிக்கையாளர்களைக் காட்டிலும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்ப தும் குறிப்பிடத்தக்கது.

நவீன சர்வாதிகாரம்!

காலனித்துவ காலத்தில் உருவாக்கப்பட்ட தொலைத்தொடர்பு சட்டம் எவ்வித மாற்றமும் செய் யப்படாவிட்டாலும் அரசின் கட்டுப்பாட்டில் அது நீடிப்பதை உறுதி செய்தது. ஆனால் புதிய சட்டத்தின் சொல்லாடல்களிலும் சித்தரிப்புகளிலும் பல உண்மைகள் மறைந்துள்ளன. உரிமம் என்பதற்கு பதிலாக அங்கீகாரம் என மாற்றப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவைகள் என்ற வரையறைக்குள் எந்த செய்திகளின் பரி மாற்றத்தையும் அடக்கிட மிகவும் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

வாட்ஸ் ஆப் செய்தி பரிமாற்றமும் மின்னஞ்சல் செய்தி அனுப்புவதும் ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு தான் இனி இருக்கும். வரும் ஆண்டுகளில் குறியாக்கத்தின் (Encryption) அடிப்படையிலான செய்திகளை பயன் படுத்தி இந்தியர்கள் அனுபவிக்கும் பாதுகாப்பு மற்றும் ரகசியத் தன்மையை உடைத்து நொறுக்கிட மற்ற விதிமுறைகளுடன் இதுவும் பயன்படுத்தப்படும். செய்திகளை இடை மறித்தல், கண்காணித்தல் அல்லது இணையத்தை முடக்கி வைத்தல் ஆகிய அதிகாரமும் அரசிடம் குவியும்.

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் தொலைத் தொடர்பு சேவைகளை தரம் பிரித்து அவற்றை முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அதிகாரத்தையும் அரசுக்கு அது வழங்குகிறது. தேசிய பாதுகாப்பு என்பது இதுதான் என வரையறுக்கப்படவில்லை.

எல்லா வற்றையும் இனி அரசு கண்காணிக்கும். பகிரப்பட்ட எந்த ஒரு தகவலின் விவரங்களை வெளியிட மறுத்தால் ரூபாய் 25,000 அபராதம் விதிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. இதன் ஆபத்துகள் குறித்த கவலையை நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ் கோகோய் மக்களவையில் சபாநாயகர் இடம் எழுப்பி னார். தொலைத் தொடர்பு, 2003.,மசோதாவை நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் 19.12.23 அன்று  கோரிக்கை வைத்தார். அரசு இவர் கோரிக்கையை புறக்கணித்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைக ளிலும் அவசரம் அவசரமாக மசோதாவை நிறை வேற்றியது.

அரசியலமைப்பை மதிக்காமல்!

திருமதி சதுர் வேதியோ அல்லது திரு கௌரவ் கோகோயோ நாடாளுமன்றத்தில் தங்களின் ஆட்சே பணைகளை இனி எழுப்ப முடியாது. அரசுக்கு எதிராக வாக்களிக்கவும் முடியாது. ஏனென்றால் மூன்றில்  இரண்டு பங்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டு விட்டனர். வெட்கம், அவமானம் என்ற குரல் எதிர்ப்பை காட்டவும் முடியவில்லை. நாடாளுமன்ற அமர்வை பற்றி பிரதாப் பானு மேத்தா ஒரு கட்டுரையில் இப்படி குறிப்பிடுகிறார்:

“நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தை சிறுமைப்படுத்தும் வகையில் அதிகாரங்கள்
ஒருவரிடம் குவிக்கப்படுகிறது. இதுவும் சட்டப்பூர்வமா
கவே நடைபெறுகிறது”.

மேல்தட்டினர் (elites)இடையே அதிகாரப் பகிர்வை  எளிமையாக்கும் வகையில்   பல சர்வாதிகார நாடுகளில் 1946 இல் இருந்து 2008 வரை நடைபெற்ற தேர்தல்களில் 80 சதவிகிதம், முடிவுகள் வெளியாகி யுள்ளன என “சர்வாதிகார ஆட்சியின் அரசியல்” என்ற நூலில் மிலன் சோலிக் தரவுகளின் மூலம் நிரூபிக்கிறார்.

சாதாரண இந்தியன் அல்லது பாரதவாசி இன்று எந்த இடத்தில் நிற்கிறான்? இந்த குழப்பங்களை பற்றி எல்லாம் நீங்கள் சிந்திக்க வேண்டாம். சிறுதானியங்கள் நிறைந்த உணவை உண்டு , யோகா பயிற்சி செய்து ஆரோக்கி யத்தையும் நல்லிணக்கத்தையும் பராமரித்திட நினை வூட்டப்படுவீர்கள்.

அரசியலமைப்புக்குப்  மாறாக இந்தியாவை ராஷ்டிராவாக மாற்றியுள்ளோம். பிரதம ரின் தெய்வீக பார்வையின் கீழ் வேதாகமங்களின் படி நடைபெறும் ஆட்சியாக அது இருக்கும் .ஆம். தொலைத்தொடர்பு மசோதா கூறுவது போல இந்தியா முன்னேறுகிறது, ஜனநாயகத்திற்கு நேர் எதிர் திசையில்.

கட்டுரையாளர்: வழக்கறிஞர் மற்றும்
 தொழில் நுட்பக் கொள்கை நிபுணர்.  
தி இந்து (ஆங்கிலம்) 23/12/23 
தமிழில் : கடலூர் சுகுமாரன் 

;